பதிவு செய்த நாள்
10
ஆக
2017
01:08
சென்னை: ’பாரம்பரிய திருமண், திருநீறு போன்ற சின்னங்களைக் கேலி, கிண்டல் செய்வதை இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம்’ என, அகில பாரத பிராமணர் சங்கம் எச்சரித்துள்ளது.அகில பாரத பிராமணர் சங்கத்தின் சார்பில், மயிலை, சமஸ்கிருதக் கல்லுாரி வளாகத்தில், சமீபத்தில் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்துக்களின் பண்பாடு, கலாசாரம் பாதுகாக்கப்பட, பாரம்பரிய திருமண், திருநீறு போன்ற சின்னங்களைக் கேலி, கிண்டல் செய்வதை, இனி பொறுத்துக் கொள்ள மாட்டோம். திருநீறு அணிந்து, அதை கிண்டல் செய்து நடிப்பதை, மீடியாக்கள் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும். சுவாதி கொலை வழக்கு தொடர்பான படம், வேறு எந்த பெயரிலும் வெளியிடக் கூடாது; அப்படத்தை, நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.