வாடிப்பட்டி, வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் ஆதிவடிவுடையாள் ஆதிஸ்வரர் கோயிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இளநீர், பால், பன்னீர், சந்தனம் உட்பட 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி முத்துக்குமாரபாண்டியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.