பதிவு செய்த நாள்
10
ஆக
2017
01:08
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஜூலை, 25 இரவு, பூச்சாட்டுதல் விழாவுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. கடந்த, 7ல் சக்தி அழைப்பு நடந்தது. நேற்று முன்தினம் காலை முதல், ஏராளமான பெண்கள், குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, பொங்கல் வைக்க தொடங்கினர். நேற்று, 500க்கும் மேற்பட்ட பெண்கள், புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். மாவிளக்கு வைத்து அம்மன் சன்னதியில் வழிபாடு நடத்தினர். ஏராளமானோர், அன்னதானம், கூழ் ஊற்றினர். திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு அதிகாலை முதல் அபி?ஷகம், ஆராதனை நடந்தது. நாளை வரை, பொங்கல் வைபவம், வரும், 15ல் பால்குட ஊர்வலம் நடக்கும்.