கொடியேற்றத்துடன் துவங்கிய திருவண்ணாமலை தீப திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2011 11:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள 72 அடி உயர தங்க கொடிமரத்தில், சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத கொடியேற்று விழா சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் பாலச்சந்திரன், கலெக்டர் மிஸ்ரா மற்றும் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தொடர்ந்து நடக்கும் பத்து நாட்கள் திருவிழாவில் ஸ்வாமி வீதி உலா காலை மற்றும் இரவும் . வீதி உலாவின் போது ஸ்வாமி வாகனங்களில் அலங்கரிக்கப்படும்போது பயன்படுத்தப்படும், 11 குடைகள், 5 லட்ச ரூபாயில் புதியதாக தயார் செய்யப்பட்டு திருக்குடைகள் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.