ஒரு பெண் தன் வீட்டில் பூனை வளர்த்தாள். அதுவோ அடுப்படியில் இருந்த பாலை அடிக்கடி குடித்து விடும். தொல்லை தாளாமல் கட்டி வைத்தாள். பூனை பசியால் வருந்தியது. ஒருநாள் அவள் இறந்து போனாள். நரகத்திற்கு அனுப்பப்பட்டாள். ஒருவர் பாலைவனத்தில் தன் ஒட்டகத்தின் மீதேறி சென்று கொண்டிருந்தார். பாலைவனச்சோலை ஒன்றில் தங்கினார். அங்கே ஒரு நாய் தாகத்துடன் நின்றது. அதைப் புரிந்து கொண்ட அவர் அருகில் இருந்த கிணற்றிற்கு சென்றார். கிணற்றில் வாளி இல்லை. தன் ஆடையை அவிழ்த்தார். ஆடையை ஒரு கயிற்றில் கட்டி உள்ளே இறக்கினார். ஆடை நனைந்ததும் வெளியே எடுத்தார். அதைப் பிழிந்து நாயின் வாயில் தண்ணீரை ஊற்றினார். அது மகிழ்ச்சியுடன் ஓடியது. அவரும் ஒருநாள் இறந்தார். சொர்க்கத்துக்கு அனுப்பப்பட்டார். விலங்குகளை வளர்த்தால் போதாது. அவற்றை கனிவோடு கவனிக்க வேண்டும் என்கிறார் நபிகள் நாயகம்.