கிருஷ்ணர் பிறந்த போது நிலவிய கிரகநிலை பற்றிய குறிப்பு கமானிக்யா என்ற ஜோதிட ¡¼ல் உள்ளது. அன்று வான மண்டலத்தில் எல்லா கிரகங்களும் சுபமான இடத்தில் இருந்தன. அந்நாள், தேய்பிறை அஷ்டமி திதியாக இருந்தாலும் கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிலா பவுர்ணமி போல் ஒளி வீசியது. தீபாவளியோ என காண்போரை வியக்க செய்தது. கிருஷ்ணர் நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தி மகாவிஷ்ணுவாக காட்சியளித்தார். கார்மேகம் போன்ற அவரது கரிய மேனியில் மஞ்சள் பட்டாடை, பொன் ஆபரணம் மின்னியது. தாய் தேவகியும் தெய்வக்குழந்தை கிருஷ்ணரை கண்டு மகிழ்ச்சியில் திளைத்தாள்.