Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிராமேஸ்வரர் கோவிலில் உலக ... கடலுார் நாகம்மன் கோவிலில் செடல் பெருவிழா கடலுார் நாகம்மன் கோவிலில் செடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழாம் நூற்றாண்டு சப்தகன்னியர் கற்சிலைகள் பழநியில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
ஏழாம் நூற்றாண்டு சப்தகன்னியர் கற்சிலைகள் பழநியில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

18 ஆக
2017
11:08

பழநி: பழநி அருகே ஆயக்குடியில் வயல்வெளியில் ஏழாம் நூற்றாண்டு சப்த கன்னியர் கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநி ஆயக்குடிபகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர்கள் கன்னிமுத்து, வாஞ்சிநாதன், பேராசிரியர் அசோகன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அதில் ஆயக்குடியில் 7ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட கற்சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாராயணமூர்த்தி கூறியதாவது: புதுஆயக்குடி குமாரநாயக்கன் குளத்தின் தெற்குக்கரை அருகே வயல்வெளியில் சப்தகன்னியர் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. சப்தகன்னியர் தொகுப்பு சிலையில் கடைசி நான்கு தெய்வங்களான வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியவற்றை ஒரேபலகை கல்லில் வடிவமைத்துள்ளனர். சப்த கன்னிமார்களில் முதலில் உள்ள பிரம்மி, மகேஸ்வரி, கவுமாரி ஆகியோரின் உருவங்கள் கிடைக்கவில்லை. தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள சிலைகளுக்கு அருகே பாறையில் உளியால் செதுக்கிய சுவடுகள் உள்ளன.  ஒரே பலகைக்கல்லில் 7 சிலைகளை வடிவமைக்கும்போது பலகை உடைந்திருக்கவேண்டும். அதனால்  சிலைசெய்யும் பணியை கை விட்டுள்ளதும் தெரிய வருகிறது. வடிவியல் கோட்பாடு மூலம் ஆய்வு செய்ததில், வைஷ்ணவி, வராகி இடது கையில் சங்கு சக்கரமும், இந்திராணிக்கு கிரீட மகுடமும், பூணுால் நடுஇடுப்பை சுற்றியுள்ள வடிவமைப்பும் உள்ளது. இதன்  மூலம் சப்தகன்னியர் சிலை 7ம் நூற்றாண்டு, அதாவது 1300 ஆண்டுகள் பழமையானது என தெரிய வந்துள்ளது. சிலை உடைந்த காரணத்தால் அப்படியே வயல்வெளிப் பகுதியில் போட்டு விட்டனர். இதனை அரசு அருங்காட்சியகத்தில் வழங்க உள்ளோம்” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar