பதிவு செய்த நாள்
18
ஆக
2017
01:08
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூரில், இந்து முன்னணியினர், காப்பு கட்டி, விரதம் துவக்கினர். இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூர் நகர் பகுதிகளில், 980 சிலைகள் பிரதிஷ்டை செய்து, நான்கு நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. பொதுக்கூட்டம், குழந்தைகள், பெண்கள், இளைஞர்களுக்கு கலாச்சார விளையாட்டு போட்டி உட்பட பல ஆன்மீக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, விழா நடத்தும் இந்து முன்னணியினர், காப்பு கட்டி, விரதம் துவக்கும் நிகழ்ச்சி, தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் கிஷோர் குமார் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் சேவுகன், ஆட்டோ சங்க செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொது செயலாளர் கிருஷ்ணன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள், கையில் காப்பு அணிந்து கொண்டனர். முன்னதாக, தாராபுரம் ரோடு கோட்டை மாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேக பூஜைகள், வழிபாடுகள் நடந்தன.