ஆர்.எஸ்.மங்கலம், ஆர்.எஸ்.மங்கலம் வள்ளுவர் தெரு முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரிகளை கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். கும்மியாட்டமும், இளைஞர்களின் ஒயிலாட்டமும் நடைபெற்றன. விழாவின் கடைசி நாளில் முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்துசென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.