Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் ... 144 ஆண்டுக்கு பின் காவிரி மஹா புஷ்கரம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுமை விநாயகர் சதுர்த்தி விழா: மரக்கன்று நட்டு கொண்டாடும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பசுமை விநாயகர் சதுர்த்தி விழா: மரக்கன்று நட்டு கொண்டாடும்

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
12:08

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியின் போது, 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, பசுமை வழியில் விழாவை கொண்டாட, இந்து முன்னணி முடிவு செய்துள்ளது; இதற்காக, விநாயகர் சிலையுடன், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு, கிழங்கு மாவு, கல் மாவு, பழைய பேப்பர் பயன்படுத்தி, ரசாயன கலப்பற்ற வண்ணம் பூசி, விநாயகர் சிலைகள் வைத்து, வழிபாடு நடத்தப் படுகிறது. திருப்பூரை அடுத்த, அலகுமலை பகுதியில், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு தேவையான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. கடந்த மாத இறுதியில், சிலை பணிகள் நிறைவடைந்தன. பகுதி வாரியாக சிலைகளை அனுப்பும் பணி, நேற்று துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு அமைப்புகள், மரக்கன்று வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன. இந்த அமைப்புகளின் பசுமை திட்டங்களுக்கு, மக்களிடையே வரவேற்பு உள்ளது. இந்து முன்னணியும், இவ்வாண்டு, பசுமையான விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, விநாயகர் சதுர்த்தி விழா நாளில், 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டு உள்ளனர். நேற்று, சிலைகளை அனுப்பி வைக்கும் நிகழ்வின் போது, ஒவ்வொரு சிலைக்கும், ஐந்து மரக்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கிளையை சேர்ந்த நிர்வாகிகள், அடுத்த ஆண்டு வரை, தண்ணீர் விட்டு, அவற்றை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar