Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் ஆவணிவிழா ... ராஜபாளையத்தில் விதவிதமான விநாயகர் சிலைகள் ராஜபாளையத்தில் விதவிதமான விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கற்றளி கோவில் கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கற்றளி கோவில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

22 ஆக
2017
11:08

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட, கற்றளிக் கோவில் மற்றும் கற்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளுக்கோட்டை அருகே, நண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீமன்குளத்தின் கரையில், சில மாதங்களுக்கு முன், நீர்வரத்து பாலம் அமைக்கும் பணி நடந்தது. அப்போது, சில கற்சிற்பங்கள் வெளிப்பட்டுள்ளன. அங்கு, தொல்லியல் ஆய்வு கழகத்தினர், கள ஆய்வு மேற்கொண்டனர்.

தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மங்கனுார் மணிகண்டன் கூறியதாவது: நண்டம்பட்டி கிராமத்தின் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டம், செங்களுர் ஊராட்சியிலும், தஞ்சாவூர் மாவட்டம், புதுக்குடி ஊராட்சியிலும் அமைந்துள்ளது.  இவ்வூரின் குடுக்கன் தரிசு என்ற இடத்தில், ஏராளமான இடைக்காலத்தைய பானை ஓடுகள் கிடக்கின்றன. இதே பகுதியில், 5 ஏக்கரில், ஆங்காங்கே கட்டுமானக் குவியல்களும், செங்கற்களும் காண முடிகிறது. அடித்தளம் முதல் கலசம் வரை, முற்றிலும் கருங்கல்லை கொண்டு எழுப்பப்பட்ட கற்றளி கோவில், வழிபாட்டில் இருந்து வந்துள்ளது. தியான கோலத்தில், 1 அடி உயரமுள்ள முக்குடை அமைப்புடன் கூடிய சமண தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்றும், கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியிலேயே சமண பள்ளி இருந்திருக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், இப்பகுதியில் சமணமும், சைவமும் பரவி இருந்திருக்கும் என்று அனுமானிக்க முடிகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷங்களை சேகரித்து, அருங்காட்சியகத்திலோ அல்லது அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஏதேனும் ஒரு பொது இடத்திலோ பாதுகாத்து, அவை மேலும் சிதைந்து விடாதபடி பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி – திண்டிவனம் சாலை மொரட்டாண்டி, 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சமிநாராயணப் பெருமாள் கோவிலில் பிரபந்தசேவை உற்சவம் நடந்தது.சொரப்பூர் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar