தூத்துக்குடி : ரத்தினபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி அருகேயுள்ள ரத்தினபுரம் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24ம் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றுவிழாவில் பாத்திமாநகர் பங்குத்தந்தை வியாகுலமரியான், கள்ளிகுளம் பங்குதந்தை அந்தோணிதாஸ், அண்ணாநகர் பங்குதந்தை மரியதாஸ் லிப்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் இன்று காலை 9 மணிமுதல் மதியம் 3 மணிவரை நோன்பு தியானம், நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை 8.45 மணிக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து வரும் 3ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் தூத்துக்குடி பனிமயமாதா ஆலய பங்குதந்தை வில்லியம்சந்தானம் தலைமை வகிக்கிறார். மாலை 6 மணிக்கு ஆலய வெள்ளிவிழா கொடியேற்றமும், தூய சவேரியார் திருஉருவப்பவனியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சகாயலூட்ரின், பங்குமேய்ப்புப் பணிக்குழு, சென்னை அன்னாள் சபை அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்துள்ளனர்.