பதிவு செய்த நாள்
28
ஆக
2017
01:08
நாமக்கல்: சின்னபெத்தாம்பட்டி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மோகனூர் அடுத்த, சின்னபெத்தாம்பட்டி காலனி, சர்வ சக்தி விநாயகர், மகா மாரியம்மன், மதுரை வீரன் சுவாமி கோவிலுக்கு கும்பாபி?ஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த, 25ல் கணபதி யாகம், நேற்று முன்தினம் லட்சுமி, நவக்கிரக யாகம் நடந்தது. நேற்று காலை, விநாயகர் பூஜையுடன் துவங்கி, இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபி?ஷகம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள், மக்கள் செய்திருந்தனர்.