ரஷ்ய அறிஞர் டால்ஸ்டாய் நபிகள் நாயகம் பற்றி சொல்வதாவது: அநாகரீகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நபிகள் நாயகம் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும், முரடர்களுக்கு கூட அகிம்சை, சகிப்புத்தன்மை, முதலிய நேர்மைகளை கற்று தந்தது. அவர்களை உண்மையான வாழ்வின்பால் இழுத்து சென்று வெற்றியை நிலை நாட்ட செய்து விட்ட பெருமை, வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடிய ஒன்றல்ல. மகான் முகம்மது நபி ஒருவர் தான் உண்மையான தீர்க்கதரிசி. அவர் உலகத்திற்கே பொதுவான ஒரு மதத்தை போதித்தவர். டால்ஸ்டாய் இறந்த போது, அவரது சட்டைப்பையில் முகம்மது நபியின் பொன்மொழிகள் என்ற ஆங்கில நூல் இருந்தது.