பதிவு செய்த நாள்
30
ஆக
2017
12:08
கீழக்கரை: பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. மதநல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நேற்று நடந்தது. ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து, மாலை 4:30 மணிக்கு தொடங்கி மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் பெரியபட்டினம் வீதிகளின் வழியாக குதிரைகள், யானை முன்னே செல்ல அலங்கரிக்கப்பட்டதேரில் கொடி ஊர்வலம் மாலை 6:00 மணிக்குள் நடந்தது. பெரியட்டினம் தர்கா கமிட்டி தலைவர் எம்.சீனி அப்துல் லத்தீப் கொடியேற்றம் செய்தார். செப். 8 இரவு சிறப்பு நிகழ்ச்சி, அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் செப். 9 (சனிக்கிழமை) அன்று அதிகாலை 4:00 மணியளவில் தர்காவை வந்தடையும். சந்தனக்கூடு விழா கமிட்டி தலைவர் ஹாஜா நஜ்முதீன், துணைத்தலைவர்கள் சிராஜுதீன், சாகுல்ஹமீது, எம்.களஞ்சியம், கே.சாகுல்ஹமீது, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, முன்னாள் ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கபீர் அம்பலம், தொழிலதிபர் சிங்கம் பசீர், இஸ்மாயில் உட்பட பலர் பங்கேற்றனர். பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.