பதிவு செய்த நாள்
30
ஆக
2017
12:08
பெசன்ட் நகர்:பெசன்ட் நகர், வேளாங்கண்ணி மாதா கோவிலின், 45ம் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலின், 45வது ஆண்டு பெருவிழா, நேற்று விமரிசையாக துவங்கியது. இந்த திருவிழாவின் துவக்க நாளான, நேற்று மாலை, 5:45 மணியளவில், சென்னை மயிலை உயர்மறை மாவட்ட முதன்மைகுரு பேராயர் எம்.அருள்ராஜ், மரி அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட, 12 அடி நீளமுள்ள கொடியை ஏற்றினார். இதையடுத்து, திருத்தலத்தில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இந்த விழாவில், திருவள்ளூர், காஞ்சி புரம், விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள், காவி உடை அணிந்து, பாதயாத்திரையாக வந்து பங்கேற்றனர். விழா காரணமாக, பெசன்ட் நகர், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து ஸ்தம்பித்தது.இந்த திருவிழா, 10 நாட்கள் நடைபெறும். செப்.,7ல், தேர் திருவிழா நடைபெற உள்ளது.