பழநி: விநாயகர் சதுர்த்திவிழாவை முன்னிட்டு, பழநியில் இந்துமக்கள் கட்சி, சிவசேனா, அகிலபாரத இந்துமகாசபா அமைப்பு சார்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பழநிநகர், கிராமப்பகுதிகளில் வைத்த 130 விநாயகர் சிலைகள் பாதவிநாயகர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பின் சண்முகநதியில் விநாயகர் சிலைகள் கரைக்கபட்டன. இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத், சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் பாலாஜி, அகிலபாரத இந்துமகாசபா மாநில தலைவர் ராஜசேகர், மாநில துணைசெயலாளர் சூர்யதுரைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். பழநி சப்கலெக்டர் வினித், தாசில்தார் ராஜேந்திரன் ஊர்வலத்தை கண்காணித்தனர். தேனி எஸ்.பி., பாஸ்கரன் தலைமையில் நுõற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.