பதிவு செய்த நாள்
30
ஆக
2017
01:08
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்த ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழாவில், பக்தர்கள் உண்டியலில் 1.90 கோடி ரூபாய் ரொக்கம், 707 கிராம் தங்கம், 14,811 கிராம் வெள்ளி செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, கடந்த, 13ம் தேதி முதல், 17ம் தேதி வரை நடந்தது.
காணிக்கை: இதில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து, மூலவரை தரிசித்தனர்.மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதலை மலைக்கோவிலில் உள்ள உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தினர். தொடர்ந்து, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மூன்று நாட்கள் கோவில் ஊழியர்கள் எண்ணினர்.
ரூ.18 லட்சம் அதிகம்: இதில், 1,90,36,124 ரூபாய் ரொக்கம், 707 கிராம் தங்கம், 14,810 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு ஆடிக்கிருத்கைகயைவிட, 18 லட்சம் ரூபாய் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.