புதுச்சேரி : ஆஞ்சநேயர் கோவில் உண்டியலை உடைத்து, காணிக்கையை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி அடுத்த தருமாபுரி, வழுதாவூர் சாலையில் ஆபத்சகாய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு, பூஜைகள் முடிந்து, நடை மூடப்பட்டது. கோவிலில் நேற்று காலை பூஜை செய்வதற்காக வந்த குருக்கள், கோவில் கிரில்கேட் அருகில் இருந்த உண்டியல் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தில் தேடியபோது, அருகில் உள்ள அரசு பள்ளியின் மாடியில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டு இருந்தது. மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.