பதிவு செய்த நாள்
31
ஆக
2017
11:08
சென்னை : பெசன்ட் நகரில் அமைந்துள்ள, அறுபடை வீடு முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னை, பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனியில் அமைந்துள்ளது, அறுபடை வீடு முருகன் கோவில். இக்கோவிலில் நேற்று மாலை, 4:00 மணி முதல், விக்னேஷ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ, வாஸ்து ஹோமங்கள் நடந்தன. அதைத் தொடர்ந்து பூர்வாங்க பூஜைகள், முதல் கால பூஜை, பிம்ப சுத்தி, அஷ்டபந்தனம், பூர்ணாஷுதி ஆகியவை நடந்தன. கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை, 6:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. காலை, 8:00 மணிக்கு பூர்ணாஹுதி, வஸ்திர தானம், கடம் புறப்பாடு தொடர்ந்து, கன்யா லக்னத்தில் கலசங்களுக்கு கும்ப நீர் சேர்த்து, மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காலை, 9:15 மணிக்கு மகா அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று முதல், அக்., 14ம் தேதி வரை, தினமும் மண்டலாபிஷேகம் நடக்கிறது.