Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 5,000 ஆண்டுகள் பழமையான.. பாண்டவர்கள் ... ஆவணி மூலத் திருவிழா: மதுரையில் சுந்தரேஸ்வரர் ஆட்சி தொடங்கியது ஆவணி மூலத் திருவிழா: மதுரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேஸ்வரர்
எழுத்தின் அளவு:
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த சுந்தரேஸ்வரர்

பதிவு செய்த நாள்

31 ஆக
2017
05:08

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் சிவபெருமாள் பிட்டுக்கு மண் சுமந்து,பிரம்படி பட்ட நிகழ்வை நினைவு கூறும் ஆவணி மூல உற்சவம் நடந்தது.

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆவணி மூல உற்சவ விழா நடந்தது. இதில் ஆவணி மூல நட்சத்திரத்தில் பழங்காலத்தில் பாண்டிய மன்னன் மதுரையை ஆட்சி செய்தபோது பெருமழை காரணமாக வைகை ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. பெருவெள்ளத்தால் அனை உடைந்து தண்ணீர் ஊருக்குள் வந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது.அப்போது பாண்டிய மன்னன் வீட்டிற்கு ஒரு ஆள் அணையை கட்ட வரவேண்டும் என கட்டளையிடுகிறார். மன்னரின் ஆணைப்படி அனைவரும் அணையை அடைத்து கொண்டிருகின்றனர். அப்போழுது வயதான பாட்டி தன் வீட்டில் ஆண் வாரிசு இருந்தால் மன்னரின் ஆணையை நிறைவேற்றி இருக்கலாம் தனது வீட்டில் ஆண் வாரிசு இல்லையை என வருந்தினார். அப்போது வயதான கிழவியின் வேதனையை போக்க சிவபெருமான் மனித உருவில் கிழவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது கிழவிவைத்திருந்த பிட்டை சாப்பிட கேட்கிறார்.

பிட்டை சாப்பிட்ட சிவபெருமானிடம் தன் சார்பில் அணையை அடைக்க வேண்டும் என கூறுகிறார். கிழவி அணையை அடைக்க சென்ற சிவபெருமான் விளையாடிக் கொண்டே உறங்கி விடுகிறார். அணை கட்டுவதை பார்வையிட வந்த பாண்டிய மன்னன் அனை கட்டுவதை விட்டு தூங்குகிறாயா என பிரம்பால் அடிக்கிறார். சிவபெருமான் பட்ட அடி உலக உயிரினத்திற்கும் உணரப்படுகிறது.இதை உணர்ந்த மன்னன் சிவபெருமானை வணங்குகிறார். சிவபெருமான் ஒரு கையால் மண்ணை அள்ளி வீச அணை அடைக்கப்படுகிறது.இந்த நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆவணி மூல உற்சவம் நடத்தப்படுகிறது. இதில் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து செல்லும் கோலத்தில் அலங்கரிக்கப்பட்ட வீதி உலா நடத்தப்பட்டது. முன்னதாக கோவிலில் சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,தனி அதிகாரி ஆசைத்தம்பி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை வழிப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar