ராமேஸ்வரம், ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் புதுச்சேரி கவர்னர் பூஜை செய்து, ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்தார். ஆக.,31ல் ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவகத்தில் அஞ்சலி செலுத்திய புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று காலை, தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று பூஜை செய்து, தனுஷ்கோடி கடல் நீரை தலையில் தெளித்து நீராடினார். பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதன் பின் கோயில் சார்பில் கவர்னருக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது. இணை ஆணையர் மங்கையர்கரசி உட்பட அதிகாரிகள் உடனிருந்நதனர்.