சாயல்குடி, சாயல்குடி அருகே குதிரைமொழி கிராமத்தில் உலகம்மன் கோயிலில் செம்மறி ஆடு சிலைக்கு பூஜை செய்து வருகின்றனர். 500 ஆண்டு பழமை வாய்ந்த இக் கோயிலில் மூலவர் சிலைக்கு கோபுர விமானம் இல்லாமல் திறந்த வெளியாக உள்ளது. அம்மனின் காலில் சிறுமியை கிடத்திய நிலையில் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளிப்புற வளாகத்தில் செம்பறி ஆட்டின் சிலை உள்ளது. கோயிலின் பக்கவாட்டு சுவர்கள் முழுவதும் வட்டவடிவிலான தமிழ் எழுத்துகள் கல்வெட்டாக உள்ளன. வெள்ளி, செவ்வாய், ஆடி மாதங்களில் விஷேச பூஜைகள் நடந்து வருகிறது. கிராமத்தை சேர்ந்த மூதாட்டி சபரியம்மாள், 70 கூறுகையில், உலகம்மன் கோயிலுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முன்னொரு காலத்தில் ஆடுமேய்க்க வந்த சிறுமி செய்த குறும்பால், கோபமடைந்த அம்மன், அவளை காலில் கிடத்தியதாகவும், மேய்ச்சலுக்கு வந்த செம்மறியாடுகள் சிலையாக நின்று போயின. அம்மனின் உக்கிரத்தை தணிக்கும் விதமாக மஞ்சசள் பொடி அபிஷேகம் செய்யப்படுகிறது. செம்மறி ஆட்டிற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருவதை வழக்கமாக கொண்டு வருகிறோம், என்றார்.