தலைவாசல்: தலைவாசல், நத்தக்கரையில் செல்வ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மாரியம்மன் திருவிழாவில் நேற்று முன்தினம் பொங்கல் வழிபாடு நடந்தது. மாலையில், மாரியம்மன் வீதியுலா நடந்ததுடன், காப்பு கட்டும் நிகழ்வுகள் நடந்தன. ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த மாரியம்மன், கோவிலை வந்தடைந்தார். இதையடுத்து மூப்பனார் மற்றும் மாரியம்மனுக்கு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள், பொங்கல் படைத்தனர்.