நாமகிரிப்பேட்டை: வடுகம், ஒண்டிமுனியப்பன் கோவில் திருவிழா நாளை நடக்கிறது. நாமகிரிப்பேட்டை அடுத்த, வடுகம் நாடார் தெருவில் ஒண்டிமுனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, கடந்த, 28ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாளை அதிகாலை, 5:00 மணிக்கு பூஜையுடன் திருவிழா தொடங்குகிறது. 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடு, 9:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மதியம், 12:00 மணிக்கு முப்பூஜை, இரவு, 7:00 மணிக்கு பெரும் பூஜையுடனும் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.