சூரமங்கலம்: சேலம், ஸ்வர்ணபுரி விநாயகர் கோவிலில், நேற்று குரு, தட்சிணாமூர்த்திக்கு கலச ஸ்தாபனம் நடந்தது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, ஸ்வர்ணபுரி விநாயகர் கோவிலில் உள்ள குரு, தட்சிணாமூர்த்தி பகவானுக்கு இன்று காலை, 8:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று இரவு, 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நவக்கிரஹ பூஜை, குரு, தட்சிணாமூர்த்தி கலச ஸ்தாபனம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.