பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், குருப் பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், குருப்பெயர்ச்சி வழிபாட்டில், தட்சிணாமூர்த்திக்கும், குரு பகவானுக்கும் அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. கப்பளாங்கரை பரமசிவன் கோவிலில், குருப்பெயர்ச்சி வழிபாட்டில், விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. சிவ வேள்வி, நவகோள் வழிபாடு உள்ளிட்ட பூஜைகளும், குரு பகவான் சிறப்பு வேள்வி, நட்சத்திர பரிகாரம், மகா பூர்ணாஹுதி பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். பொள்ளாச்சி, ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் குருப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடந்தன.
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், குருப்பெயர்ச்சியை ஒட்டி தட்சிணாமூர்த்தி சிறப்பு வேள்வி, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், குருப்பெயர்ச்சியை ஒட்டி தட்சிணாமூர்த்திக்கு, நேற்றுமுன்தினம் காலை, 5.30 மணிக்கு வேள்வி பூஜை நடந்தது. இதில், பரிகாரம் செய்ய வேண்டி ராசிக்காரர்கள் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து காலை, 9.32 மணிக்கு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்து. பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் அபிஷேகம் செய்தனர். மலர் அலங்காரத்தில், அருள்பாலித்தார். மூலவர் சிவலோகநாதர், சிவலோகநாயகி மற்றும் முருகன், சண்டீகேஸ்வரர் ஆகியோருக்கு பூஜை செய்து, தீபாராதனை வழிபாடு நடந்தது.