பதிவு செய்த நாள்
04
செப்
2017
01:09
தலைவாசல்: தலைவாசல் அருகே, மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. தலைவாசல், நத்தக்கரையில், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று மாலை, பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களால், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனின் சிலை அலங்கரிக்கப்பட்டது. அலங்கரித்த தேரில், அம்மனை அமர வைத்து, முக்கிய வீதிகள் வழியாக, தேரை வடம்பிடித்து, ஏராளமான பக்தர்கள் இழுத்துச்சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.