பதிவு செய்த நாள்
05
செப்
2017
12:09
மல்லசமுத்திரம்: கூத்தாநத்தம் கிராமம், உப்புக்கரடு பகுதியில், புதிதாக கட்டப்பட்டுள்ள, கரியபெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், கூத்தாநத்தம் கிராமம், உப்புக்கரடு எனும் இடத்தில் ஊர் பொதுமக்கள் சார்பாக, தேவி, மற்றும் கரியபெருமாள் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. கடந்த, 2 காலை, 7:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை கோபூஜை, கணபதிஹோமம், காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வருதல், முளைப்பாரிகை ஊர்வலம், முதற்கால யாகபூஜை, 3 காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை திருப்பள்ளி எழுச்சி, துவாரபூஜை, இரண்டாம் கால யாகவேள்வி, மூலமந்திர ஹோமம், விமான கலசம் வைத்தல், கோபுர சிலைகளுக்கு கண்திறப்பு நடந்தது. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு மேல், திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி, நாடிசந்தானம் நடந்தது. 5:45 மணி முதல், 6:45 மணி வரை கோபுர கலசங்களுக்கு தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.