பதிவு செய்த நாள்
05
செப்
2017
01:09
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் மரியாள் நகர் மகாலட்சுமி கோவில், கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ரெட்டியார்பாளையம் மரியாள் நகரில், உள்ள அன்னை மகாலட்சுமி கோவிலுக்கு இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கோவில் திருப்பணிகள் நடந்தது. கோவில் விரிவாக்கம் மற்றும் மஹா மண்டபம் புதுப்பிப்பு பணிகள் நடந்தன. மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோஷ்ணம் (கும்பாபிஷேகம்) கடந்த 2ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:30 மணிக்கு விஸ்வரூபம், கும்ப ஆராதனம், மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானங்கள் நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடும், சரியாக 10:00 மணியளவில் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. முதல்வர் நாராயணசாமி, பாலன் எம்.எல்.ஏ., பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, அன்னை மகாலட்சுமி ஆலய திருப்பணிக்குழு மற்றும் ஆலய நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.