திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த குருவம்மாபேட்டை ஐயனாரப்பன், வெற்றிவீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 10:15 மணிக்கு ஐயனாரப்பன், ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.