பதிவு செய்த நாள்
05
செப்
2017
01:09
செட்டிப்புண்ணியத்தில், ஹயக்ரீவருக்கு ஜெயந்தி விழா, நேற்று நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, செட்டிப்புண்ணியம், கிராமத்தில், வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதப் பெருமாள், தேவநாதனுடைய அதிசுந்தரமான பிரயோக சக்கத்துடன் கூடிய உற்சவர் உள்ளார். மேலும், தேசிகரால் பூஜிக்கப்பட்ட யோக ஹயக்ரீவரும் இங்கு உள்ளார். இங்குள்ள, ஹயக்ரீவருக்கு, ஆண்டு தோறும், ஜெயந்தி விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜெயந்தி விழா, நேற்று காலை சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. பகல், 2:30 மணிக்கு, ஹயக்ரீவருக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமியை வழிப்பட்டு சென்றனர்.