பதிவு செய்த நாள்
05
செப்
2017
01:09
காஞ்சிபுரம்: ஆவணி மாத, கடைசி திருவோண நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரத்தில், தீபப்பிரகாசர், வேதாந்த தேசிகர் புறப்பாடு நடந்தது. காஞ்சிபுரம், விளக்கொளி பெருமாள் கோயில் தெருவில், தூப்புல் வேதாந்த தேசிகர் கோயில் உள்ளது. ஆவணி மாத கடைசி திருவோண நட்சத்திரத்தையொட்டி, நேற்று, உபயநாச்சியாருடன், தீபப் பிரகாசர் மற்றும் வேதாந்த தேசிகர், புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, வேதாந்த தேசிகருக்கு, சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.