பதிவு செய்த நாள்
06
செப்
2017
11:09
காஞ்சிபுரம்: பரகால மகாதேசிகர், 35வது மடாதிபதியின், வருஷ நட்சத்திரத்தையொட்டி, லட்சுமி ஹயக்ரீவருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது.காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில், துாப்புல் பரகால மடம், லட்சுமி ஹயக்ரீவர் சன்னதி உள்ளது. இங்கு, 35வது, மடாதிபதி, பரகால மகா தேசிகரின் வருஷ நட்சத்திரத்தையொட்டி, லட்சுமி ஹயக்ரீவருக்கு, சிறப்பு அபிஷேகம், துாபதீப ஆராதனையும், விசேஷ திருமஞ்சனமும் நடந்தது. இதில், ஏராளமான மாணவ மாணவியர், பக்தர்கள் பங்கேற்றனர்.