பதிவு செய்த நாள்
06
செப்
2017
12:09
திருப்பரங்குன்றம்: விளாச்சேரியில் நவராத்திரிக்காக பெரிய அளவிலான கொலு பொம்மைகள் புதுமை யாக தயாரிக்கப் படுகின்றன.இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தகுந்தாற்போல் சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், 3 இஞ்ச் முதல் 15அடி உயரம்வரை விநாயகர் சிலைகள், ’மெகா’ அகல் விளக்குகள், கிறிஸ்துமஸ் குடில்கள் என பொம்மை களை களிமண், காகிதகூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட் ஆகிய வற்றால் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன.நவராத்திரி விழாவிற்காக தற்போது கொலு பொம்மைகள் தயாரிப்பு மும்முரமடைந்துள்ளது.
ராமலிங்கம் கூறியதாவது:பரம்பரை பரம்பரையாக பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம். தற்போது நவராத்திரிக்காக வழக்கமாக தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளுடன் இந்த ஆண்டு புதிதாக ஜல்லிக்கட்டு செட், தஞ்சை கூத்து செட், திருமனஞ்சேரி கோயில் செட், திருப்பள்ளி எழுச்சி 18 பொம்மைகள், வேதமூர்த்திகள் செட், சொர்க்க வாசல் செட் 35 பொம்மைகள்,பிரகதாம்பாள், வளையல்கார அம்மன், விநாயகர் திருக்கல்யாணம் ஆகியவை மூன்று இஞ்ச் முதல் நான்கரை அடி உயரம் வரை காகித கூழால் தயாரித்துஉள்ளோம்.களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம். கோயில்கள், காதி விற்பனையகங்களில் இச் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. வெளி மாநிலத்தினரின் ஆர்டரின்பேரிலும் சுவாமி சிலைகள் தயாரித்து கொடுக்கிறோம், என்றார்.