பதிவு செய்த நாள்
06
செப்
2017
01:09
சேலம்: கோட்டை அழகிரிநாதர், திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவோணத்துக்கு பின் வரும் பவுர்ணமி நாளில், சேலம், கோட்டை பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜை நடக்கும். அதையொட்டி, நேற்று அதிகாலை பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமண கோலத்திலும், ஆண்டாள் ஊஞ்சலில் அமர்ந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
* சேலம், தேரடி வீதி ராஜ கணபதி கோவிலில், கடந்த, 23ல் இருந்து, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வந்தது. இறுதி நாளான நேற்று காலை, 10:00 மணிக்கு, பால் அபி?ஷகம் நடந்தது. இரவு வரை, சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமானோர் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.