Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மகாளய அமாவாசை: முன்னோரிடம் ... அக்.20ல் சோலைமலை முருகன் கோயில் கந்த சஷ்டி விழா துவக்கம் அக்.20ல் சோலைமலை முருகன் கோயில் கந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா புஷ்கரம்: ஒகேனக்கல்லில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மகா புஷ்கரம்: ஒகேனக்கல்லில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

19 செப்
2017
11:09

ஒகேனக்கல்: மகா புஷ்கரத்தை முன்னிட்டு, ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் நேற்று யாகம் வளர்த்து, பல்வேறு பூஜைகள் நடத்தி, பக்தர்கள் புனித நீராடினர். தமிழகம் முழுவதும் உள்ள காவிரி ஆற்றங்கரையோரம், மகா புஷ்கரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், புஷ்கர விழா, அகில பாரத துறவியர் சங்கத் தலைவர், சுவாமி ராமானந்தா தலைமையில் நடந்தது.

சிறப்பு பூஜை : தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஒகேனக்கல் காவிரியில் குவிந்தனர். இவர்கள், குடும்பத்தோடு ஆற்றில் புனித நீராடினர். பல்வேறு பகுதிகளில் இருந்து, கொண்டு வரப்பட்ட சுவாமி சிலைகளையும் புனித நீராடச் செய்து, காவிரி தாய்க்கு வழிபாடு செய்த பின், ஊர்வலமாக எடுத்து சென்று, தேவநாதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.

சாதுக்கள் பங்கேற்பு : விழாவில், காவிரி பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் அம்சராஜ், காளீஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் உட்பட, சாதுக்கள், ஆஸ்ரம நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். விழா கமிட்டியினர் கூறுகையில், ’தமிழகம் முழுவதும், மகா புஷ்கரம் விழாவுக்கு, சிறப்பான முறையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு எந்தவித ஏற்பாடுகளும் செய்யவில்லை. ஆற்றுப் படுகைகளில், பாதுகாப்பான முறையில், நீராடக்கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை’ என்றனர்.

கும்பகோணம் வந்த காவிரிக்கு வரவேற்பு : பக்தர்கள் புனித நீராடுவதற்காக, 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், 15ம் தேதி கல்லணைக்கு வந்தது. அங்கிருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர், நேற்று காலை கும்பகோணம் வந்தது. பொதுமக்கள், இந்து அமைப்பினர், ஆன்மிக அமைப்பினர், ஆரத்தி எடுத்தும், பால் ஊற்றியும், காவிரித் தாய்க்கு, மங்கள பொருட்களை வழங்கியும், வரவேற்றனர். ’காவிரியில் தண்ணீர் வருவதால், புஷ்கரத்தை முன்னிட்டு, புனித நீராடுபவர்களின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிக்கும்’ என, தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளை அமைப்பினர் தெரிவித்தனர்.

புனித நீராடிய ரவிசங்கர் : ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறையில், காவிரி புஷ்கர விழா நடந்து வருகிறது. வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், நேற்று புனித நீராட, ஹெலிகாப்டரில் வந்தார். காவிரி ஆற்றில் பால், சந்தனம், புனித தீர்த்தம் ஊற்றி வழிபட்டு புனித நீராடினார். பின், சங்கமேஸ்வரர் கோவில், வேதநாயகி அம்மன் கோவில், பெருமாள் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தார்.

அவர் கூறியதாவது: நாட்டுக்கு மிக முக்கியமானது நீர் தான். காவிரி புஷ்கர விழா நடக்கும் வேளையில், பிரசித்தி பெற்ற கூடுதுறையில் புனித நீராடி, சங்கமேஸ்வர சுவாமியை வழிபட வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar