Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இசைக் கலைஞர் யேசுதாஸிற்கு பத்மநாப ... உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கோபுரத்தில் வளர்ந்து வரும் செடிகள் உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷாண தீர்த்தத்தில் கட்டப்பட்டுள்ள நடை பாதை சேதம்
எழுத்தின் அளவு:
தேவிபட்டினம் நவபாஷாண தீர்த்தத்தில் கட்டப்பட்டுள்ள நடை பாதை சேதம்

பதிவு செய்த நாள்

19 செப்
2017
11:09

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் அருகே தேவிபட்டினம் பகுதியில் நவபாஷாண தீர்த்தம் பகுதியில் கடலில் அமைக்கப்பட்டுள்ள நடை பாதை சேதமடைந்துள்ளதால், பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவிபட்டினத்தில் நவபாஷாண தீர்த்தம் உள்ளது. கடலில் நவக்கிரகங்களின் சிலைகள் உள்ளன. கடலில் இருந்து 20 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், இப்பகுதிக்கு பக்தர்கள் செல்வதற்காக கான்கிரீட்டாலான பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் நீரில் இரும்பு துாண்கள் அமைக்கப்பட்டு, அதன் மேல் நடை பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தீர்த்தம் பகுதிக்கு வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரத்திற்கும் குறையாமல் வருகை தருகின்றனர். இந்த தீர்த்தத்தில் தோஷங்கள் உள்ளவர்கள் பரிகார பூஜை செய்து, சங்கல்ப பூஜையும் செய்து வருகின்றனர். இதற்கென குறைந்த கட்டணத்தில் இந்து சமய அறநிலையத்தினர் வசதி செய்துள்ளனர். கடல் பகுதிக்கு செல்லும் நடை பாதைகள் பல இடங்களில் சேதமடைந்து, அபாய நிலையில் உள்ளன. கடல் நீரின் காரணமாக உப்புக்களால் கட்டுமானங்கள் அரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இப்பகுதியில் சுற்றுலா, பரிகார பூஜைக்கு வருகை தருபவர்கள் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அபாயமாக உள்ள பகுதியில் சீரமைப்பு செய்து பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு ... மேலும்
 
temple news
சென்னை; சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, அறுபத்து மூவர் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar