செஞ்சி விஸ்வகர்மா பேரவை விழா விநாயகர் கோவிலில் அன்னதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2017 01:09
செஞ்சி: செஞ்சியில் விஸ்வகர்மா பேரவை சார்பில், விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடந்தது.செஞ்சியில் விஸ்வகர்மா பேரவை சார்பில், திருவண்ணாமலை சாலை விநாயகர் கோவிலில், விஸ்வகர்மாவுக்கு முதல்கால சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை யும், சாமி வீதியுலாவும் நடந்தது. இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட தலைவர் குருமூர்த்தி தலைமை தாங்கினார். வாசுதேவன் வரவேற்றார். நிர்வாகிகள் மணி, ரங்கநாதன், கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், ராஜசேகர்முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிர்வாகிகள் வேலு, ஜெகதீசன், மணிகண்டன், மகேந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.