கொடுமுடி: வள்ளலார் ஜெயந்தியின், 75ம் ஆண்டு விழா நாளை நடைபெற உள்ளது. சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் சார்பில், வள்ளலார் ஜெயந்தியின், 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மூலனூர் முத்துசாமிக்கவுண்டர் டிரஸ்ட் மூலமாக, கொடுமுடி அறுபத்து மூவர் மடாலயத்தில் திருவருட்பா, பாராயணம், சொற்பொழிவு மற்றும் அருட்பெருஞ்சோதி வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவை சிறப்பிக்க இமயஜோதி திருஞானந்தா சுவாமிகள் வருகை தர உள்ளார். விழாவில், பொதுமக்கள் கலந்துகொள்ள சமரச சன்மார்க்க சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபரம் பெற, 04204 223111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.