Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறையில் மகா புஷ்கரம் விழா ... சென்னை கோவிலில் 4,000 பொம்மைகளுடன் கொலு சென்னை கோவிலில் 4,000 பொம்மைகளுடன் கொலு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் 2வது ரோப்காருக்கு பூஜை : பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:
பழநியில் 2வது ரோப்காருக்கு பூஜை : பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பதிவு செய்த நாள்

25 செப்
2017
11:09

பழந: பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு பூஜை செய்து இரண்டாவது ரோப்கார் ரூ.72கோடி மதிப்பீட்டில் அமைக்க பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பழநி மலைக்கோயில் ரோப்கார் ஸ்டேஷன் அருகிலேயே இரண்டாம் ரோப்கார் நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு நவீன தொழில்நுட்பத்துடன் அமைப்பதற்காக 11 பேர் கொண்ட ரோப்கார் கமிட்டி உள்ளது. 2வது ரோப்கார் அமைப்பதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டது. இதில், பிரான்சை சேர்ந்த போமா ரோப்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய ரோப்கார் கமிட்டி முடிவு செய்தது. அதன்படி கடந்த ஜூலையில் பிரான்ஸ் நிறுவனத்தின் சார்பில், சென்னை தனியார் நிறுவன தலைமைப்பொறியாளர் வெங்கடாசலம் குழுவினர் பழநி வந்தனர். ரோப்கார் கமிட்டியிலுள்ள பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், பொறியாளர்கள் ஆகியோருடன் இரண்டாவது ரோப்கார் அமைய உள்ள கீழ்தளம் மற்றும் மேல்தளம் ஆய்வு செய்யப்பட்டது. ரூ.72கோடி மதிப்பீட்டில் இரண்டாவது ரோப்கார் நவீன தொழில்நுட்பத்தில் அமைகிறது.

ஒரு பெட்டியில் 15 முதல் 20 பேர் பயணம் செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நேற்று முன்தினம் (செப்.23) மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜையில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் 2வது ரோப்கார் அமைக்க கோயில் நிர்வாகத்துக்கும், பிரான்ஸ் நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் ஒப்பந்தம் கையொப்பம் ஆகியுள்ளது. இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: முதல் ரோப்கார் அருகிலேயே இரண்டாவது ரோப்கார் அமைக்கப்படுகிறது. இதற்காக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அனுமதியுடன், பிரான்ஸ் நிறுவனத்தின் அனுமதி பெற்ற சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். விரைவில் 2வது ரோப்கார் பணிகள் துவங்க உள்ளது என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar