திண்டிவனம்: சிங்கனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், 7 ம் ஆண்டு மகோற்சவம் துவங்கியது. திண்டிவனம் அடுத்த சிங்கனூரில் லட்சுமி நாராயண என்ற சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில், 7ம் ஆண்டு புரட்டாசி மாத மகோற்சவம் துவங்கியது. இதை முன்னிட்டு, முதல் சனிக்கிழமையான நேற்று முன்தினம், திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில், சுவாமி அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டாம் சனிக்கிழமையான வரும் 30ம் தேதி புஷ்ப அலங்காரத்திலும், மூன்றாம் சனிக்கிழமையான அடுத்த மாதம் 7 ம் தேதி சந்தனகாப்பு அலங்காரத்திலும், 14 ம் தேதி தைலகாப்பு அலங்காரத்திலும் அருள் பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ராகவன் சுவாமி செய்துள்ளார்.