மயிலாடுதுறையில் துலாக்கட்டத்தில் காவிரி தாய்க்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2017 02:09
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. விழாவின் 12ம் திரு நாள் காவிரியின் இருகரைகளிலும் சிறப்பு பூஜைகள், தீர்தவாரி, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை வடக்கு கரையில் உள்ள யாகசாலையில் காவிரித்தாய், கடல் ராஜனை எழுந்தருள செய்து, தீக்ஷிதர்கள் வேத மந்திரங்கள் ஓத காவிரித் தாய்க்கு திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பேரூராட்சிகள் இயக்குனர் பழனிச்சாமி, விழா ஒருங்கினைப்பாளர் மகாலட்சுமி, இனை செயலாளர் அப்பர் சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.