ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கோயில்களில் நவராத்திரி விழாக்கள் நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான அலங்காரம், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. ராமநாதபுரம் அரண்மனை சமஸ்தானத்தை சேர்ந்த ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வெளிப்பட்டினம் ருத்ர காளியம்மன் கோயில், ஆதி ரெத்தினேஸ்வரர் கோயில், காட்டுப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஐயப்பன் கோயில், திருப்புல்லாணியில் உள்ள ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் உள்ள பத்மாஸினித்தாயார் கோயில், உட்பட அனைத்து கோயில்களிலும், அம்மனுக்கு மாலையில் சிறப்பு அபிஷேகமும், தினசரி ஒரு அலங்காரத்தில் காட்சி தருகின்றனர்.இரவு கோயில்களில் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. விஜயதசமி தினத்தன்று அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் தினசரி ஏராளமான பக்தர்கள் பங்கு பெற்று வருகின்றனர்.