பதிவு செய்த நாள்
26
செப்
2017
11:09
பல்லடம் : நவராத்திரி விழாவை முன்னிட்டு, வட மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் பலர், அருள்புரத்தில் துர்கா பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். கடந்த, 21ம் தேதி முதல் துவங்கிய நவராத்திரி விழாவை, வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி பல்லடம் அருகே, அருள்புரம் தண்ணீர் பந்தலில், வட மாநிலத்தை சேர்ந்த பலர் துர்காதேவி சிலையை பிதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். அதில், சயலபுத்ரி தேவி, பிரசாரணி தேவி, சந்திரகண்டா தேவி உட்பட ஒன்பது வகையான பூஜைகள் நடைபெறவுள்ளது. நவராத்திரி விழா முடிவுக்கு வரும் இரண்டு நாட்களுக்கு முன், துர்க்கையின் கண்கள் மற்றும் முகம் திறக்கப்படும் என்ற ஐதீகத்தின்படி, துர்கையின் முகத்தை மூடியவாறு தினசரி பூஜை செய்து வருகின்றனர். நிறைவு நாளில், சிறப்பு பூஜை, பஜனையுடன் சிலை பவானி கொண்டு சென்று கரைக்கப்படும் என்றனர். வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமையன்று தாண்டியா ஆட்டத்துடன் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.