பதிவு செய்த நாள்
26
செப்
2017
12:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த பூனாசிப்பாடியில், ஆனந்தன், 35, என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேப்ப மரம் உள்ளது. இந்த மரத்தின் கிளையிலிருந்து, கடந்த, 19 முதல் பால் வடிந்து கொண்டே இருக்கிறது. இதை கண்ட அப்பகுதி மக்கள், வேப்ப மரம் அருகே பொங்கலிட்டு, மரத்திற்கு மஞ்சள், குங்கும் பூசி, சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து, கும்பிட்டு விட்டு செல்கின்றனர்.