பதிவு செய்த நாள்
26
செப்
2017
12:09
சேலம்: திருப்பதி திருமலையில் நடைபெறும், பிரம்மோற்சவ கருட சேவைக்காக, சேலத்திலிருந்து இரண்டு டன் வாசனை பூக்கள் தொடுக்கப்பட்டு, லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பதி திருமலையில், அக்., 1 வரை ஸ்ரீவாரி மஹா பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதில், வரும், 27ல் நடைபெறும் கருட சேவைக்காக, திருமலை ஸ்ரீ திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், பூத்தொடுக்கும் நிகழ்ச்சி, நேற்று சேலம் டி.ஆர்.எஸ்., திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், சம்பங்கி, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட இரண்டு டன் வாசனை பூக்களை, 300க்கும் மேற்பட்ட பெண்கள், மாலையாக தொடுத்தனர். இப்பூக்கள் லாரி மூலம், திருப்பதி திருமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரஸ்டி பாலசுப்ரமணி தலைமையில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.