நாளை மதுரை மீனாட்சியம்மன் குண்டோதரனுக்கு அன்னமிடல் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.பாண்டிய இளவரசியான மீனாட்சி, கைலாயத்தை நோக்கி படையெடுத்தாள். சிவபெருமானே எதிரில் வந்து நிற்க, மீனாட்சி செய்வதறியாமல் நாணம் கொண்டாள். அப்போது அசரீரியாக,“கொன்றைவார் சடையனான இவரே உன் மணாளன்” என ஒலித்தது. அதன் பின், சிவனுக்கும், மீனாட்சிக்கும் திருமணம் நடந்தது. மணமகன் சிவன் வரும் போது, கைலாயத்தில் இருந்த குண்டோதரன் உள்ளிட்ட கணங்களும் வந்தனர். குண்டோதரனுக்காக மலை போல உணவும், வைகை நீரும் வரவழைத்தார் சிவன். பழைய கல்யாண மண்டபத்தில் குண்டோதரன் சிலை உள்ளது. இவனுக்கு தயிர் சாதம், இளநீர் படைத்த பின் மீனாட்சி கல்யாண விருந்து நைவேத்யமாகும். இந்த அலங்காரத்தைதரிசித்தால் உணவு குறைவின்றி கிடைக்கும்.
நைவேத்யம்: எலுமிச்சை சாதம், வெண்பொங்கல்
பாட வேண்டிய பாடல் குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே.