தென் திருமலை வேங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரமோற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27செப் 2017 11:09
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகேவுள்ள தென்திருமலை வேங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. கடந்த, 23ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பெரிய, சிறியசேஷ வாகனங்களிலும், நேற்று முன்தினம் காலை சிம்ம வாகனத்திலும் மலையப்ப சுவாமி திருவீதி உலா வந்தது பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார். மாலையில் சர்வபூபால வாகன உற்சவமும், இன்று காலை, 9:00 மணிக்கு ஸ்ரீவாரி சுவாமிக்கு, வில்லிப்புத்துார் ஆண்டாள் மாலை சாத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 30ம் தேதி காலை, 8:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.