திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழாவில் கோவர்த்தனாம்பிகை அம்பாள் தினமும் ஒரு கொலு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். விழாவின் உச்ச நிகழ்ச்சியாக செப்.,30 மாலை சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன், வெள்ளி வில், அம்புடன், தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளுவார். சுவாமி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை முடிந்து, வன்னி மரத்தடியில், வில், அம்பு வைத்து விக்னேஸ்வர, வர்ணபூஜை நடக்கும். பின்பு நான்கு திசைகளிலும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடக்கும். மழை பெய்வதற்காக ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடக்கிறது.